உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  ஜெ., பேரவை திண்ணை பிரசாரம்

 ஜெ., பேரவை திண்ணை பிரசாரம்

சிதம்பரம்: கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., ஜெ., பேரவை சார்பில், குமராட்சியில் நடந்த திண்ணை பிரசாரத்தை பாண்டியன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். குமராட்சி அடுத்துள்ள மா.புளியங்குடியில் நடந்த நிகழ்ச்சிக்கு, கடலுார் கிழக்கு மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் கானுார் பாலசுந்தரம் தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளர் முருகுமாறன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் எள்ளேரி பிரபு, ஒன்றிய பேரவை செயலாளர் அருள்செல்வன் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். கிழக்கு மாவட்ட செயலாளர் பாண்டியன் எம்.எல்.ஏ., பங்கேற்று, கடந்த கால அ.தி.மு.க., அரசு சாதனைகள் குறித்த துண்டு பிரசுரத்தை பொதுமக்களுக்கு வழங்கி திண்ணை பிரச்சாரத்தை துவக்கி வைத்தார். மாவட்ட ஜெ., பேரவை இணை செயலாளர் மணிகண்டன், ஒன்றிய துணை செயலாளர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய அவைத் தலைவர் கோவிந்தராஜ், மாவட்ட கலை இலக்கியத் துறை செயலாளர் இளஞ்செழியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை