உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிறந்த கல்வி சேவை வழங்குவதில் கலைமகள் மெட்ரிக் பள்ளி முதன்மை

சிறந்த கல்வி சேவை வழங்குவதில் கலைமகள் மெட்ரிக் பள்ளி முதன்மை

மாறி வரும் உலகளாவிய மாற்றங்களுக்கு ஏற்ப கல்வி பணியில் புதுமை புகுத்தப்பட்டு வருகிறது என, காட்டு மன்னார்கோவில் கலைமகள் பள்ளி நிறுவனர் முத்துக்குமரன் கூறினார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: கடந்த 1981ம் கல்வியாண்டில் ஆரம்ப கல்வி பணியை கலைமகள் கல்வி குழுமம் தோற்றுவித்தது. மாணவர்கள் பள்ளி பருவத்தில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு ஒவ்வொரு நாளும் அவர்களுக்கு கல்விப் பணியில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. பள்ளிப்பருவத்திலே எதிர்கால வாழ்விற்கு தேவையான சிந்தனைகளை வளர்த்து மற்றவர்களுக்கு உதவும் எண்ணத்தை மாணவர்கள் உருவாக்கிக் கொள்ள வேண்டும். வளர்ந்து வரும் உலகில் மாறிவரும் உலகளாவிய மாற்றங்களுக்கு ஏற்ப கல்வி பணியை எமது பள்ளியும் மாணவர்களுக்கு கற்றல் கற்பித்தலில் புதுமை புகுத்த வேண்டும் என்ற தொலைதூர நோக்கில் டிஜிட்டல் வகுப்பறை, தேசிய திறனறித் தேர்வு, நான்காம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்க உள்விளையாட்டு அரங்கம், உயர்கல்வி பயில வழிகாட்டுதல் நிகழ்ச்சி என, பன்நோக்கு கலைத்திட்டங்களை செயலாற்றி வருகிறது. 2024-25ம் கல்வியாண்டில் பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வில் மாநில அளவில் மாணவர்கள் சாதனை புரிந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி