உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  கிருஷ்ணாபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் மகா கும்பாபிஷேகம்

 கிருஷ்ணாபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் மகா கும்பாபிஷேகம்

புவனகிரி: கிருஷ்ணாபுரம் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. புவனகிரி தாலுகா, கிருஷ்ணாபுரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் காஞ்சி காமகோடி பீடாதிபதி மகா சுவாமிகள், மன்னார்குடி செண்டலங்கார ஜீயர் சுவாமிகள் மற்றும் பக்தர்கள் மூலம் புனரமைக்கப்பட்டது. கோவில் கும்பாபிஷேகம் கடந்த 29ம் தேதி பல்வேறு பூஜைகளுடன் துவங்கியது. கடந்த 2 நாட்களாக பல்வேறு பூஜைகள் நடந்தன. நேற்று காலை கோ பூஜைக்கு பின், கடம் புறப்பாடு துவங்கி காலை 9.20 மணிக்கு விமானத்தில் புனித நீர் ஊற்றி மகாகும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ