| ADDED : டிச 02, 2025 04:49 AM
விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த கோ.பொன்னேரி கிராமத்தில் உள்ள மகா சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கோ.பொன்னேரி கிராமத்தில் உள்ள மகா சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த நேற்று முன்தினம் (30ம் தேதி) மாலை 6:00 மணிக்கு, கணபதி ஹோமம், விக்னேஸ்வர பூஜை, மூலமந்திர ஹோமம், முதல்கால யாகசாலை பூஜை நடந்தது. நேற்று காலை 6:00 ம ணிக்கு, இரண்டாம் கால யாகசாலை பூஜை, காலை 8:00 மணிக்கு கடம் புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. அதைத்தொடர்ந்து, காலை 8:30 மணிக்கு, வரசித்தி விநாயகர், மகா சக்தி மாரியம்மன், சுப்ரமணியர் வள்ளி, தெய்வானை, கோவில் கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றி கும்பா பி ேஷகம் நடந்தது. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.