விருத்தகிரீஸ்வரர் கோவிலில் உழவார பணி
விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில், சென்னை திருவான்மியூர் நடராஜ பெருமாள் அறக்கட்டளை சாப்பில், இரண்டு நாட்கள் உழவார பணி நடந்தது. கோவில் வெளிபிரகாரம், உட்பிரகாரம், நுாற்றுக்கால் மண்டபம், ராஜகோபுரம் முகப்பு, சுவாமி மற்றும் தாயார் சன்னதிகளில் மண்டியிருந்த குப்பை மற்றும் முட்செடிகளை 150க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று அப்புறப்படுத்தி சுத்தம் செய்தனர். மேலும், கோவில் வளாகத்தில் உள்ள தீபம் ஏற்றும் விளக்குகளை கழுவி சுத்தம் செய்தனர்.