உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  வெலிங்டன் நீர்த்தேக்க கரையை கான்கிரீட் கரையாக அமைக்க கோரி ஆர்ப்பாட்டம்

 வெலிங்டன் நீர்த்தேக்க கரையை கான்கிரீட் கரையாக அமைக்க கோரி ஆர்ப்பாட்டம்

திட்டக்குடி: கீழ்ச்செருவாய் வெலிங்டன் நீர்த்தேக்க கரையை கான்கிரீட் கரையாக அமைக்க வலியுறுத்தி இந்திய கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. திட்டக்குடி தாலுகா அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மங்களூர் ஒன்றிய செயலாளர் உலகநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் முருகையன் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் செல்வராஜ் வரவேற்றார். பெண்ணாடம் நகர செயலாளர் செந்தில்முருகன், மாவட்ட குழு உறுப்பினர் ரமேஷ், ஒன்றிய துணை செயலாளர்கள் ராஜ்குமார், கலியபெருமாள், ஒன்றிய பொருளாளர் பெரியசாமி உட்பட பலர் பங்கேற்றனர். கீழ்ச்செருவாய் வெலிங்டன் நீர்த்தேக்க கரையை கான்கிரீட் கரையாக அமைக்க வேண்டும். திட்டக்குடி தாலுகா கிராமங்களில் மக்காச்சோளம், பருத்தி, நெல், மரவள்ளி, உளுந்து, வேர்க்கடலை உள்ளிட்ட பயிர்களுக்கு தேவையான இடுபொருட்களை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், திட்டக்குடி அரசு கலைக் கல்லுாரி மாணவர்களின் நலன்கருதி, கல்லுாரி நேரங்களில் பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும். திட்டக்குடி அரசு மருத்து வமனையில் காலியாக உள்ள எலும்பு மற்றும் தோல் சிகிச்சை பிரிவுக்கு மருத்துவர் நியமிக்க வேண்டும் உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ