சப்வேயில் மழைநீர் தேக்கம்: வாகன ஓட்டிகள் அவதி
பரங்கிப்பேட்டை: சப்வேயில் மழைநீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். விழுப்புரம்- நாகப்பட்டிணம், நான்கு வழிச்சாலையில், பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுாரில் இருந்து,தீர்த்தாம்பாளையம் கிராமத்திற்கு பொதுமக்கள் செல்ல, நான்கு வழிச்சாலையில் 'சப்வே' அமைக்கப்பட்டது. கடந்த மாதம் கனமழை பெய்த நிலையில், தண்ணீர் சப்வேயில் தேங்கியுள்ளது. இதனால், தீர்த்தாம்பாளையம் மற்றும் பு.முட்லுார் கிராம பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை எழுந்துள்ளது.