உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நெல்லிக்குப்பத்தில் ரூ.1 கோடியில் கட்டப்பட்ட பஸ் நிலையம் செயல்பாட்டிற்கு வராமல் பாழ்

நெல்லிக்குப்பத்தில் ரூ.1 கோடியில் கட்டப்பட்ட பஸ் நிலையம் செயல்பாட்டிற்கு வராமல் பாழ்

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில் ரூ.1 கோடி செலவில் கட்டப்பட்ட பஸ் நிலையம் செயல்பாட்டிற்கு வராமல் பாழாகி வருகிறது. நெல்லிக்குப்பம் நகராட்சியில் கடந்த 2005 ஆம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா பஸ் நிலையம் கட்ட ஒரு கோடி நிதி ஒதுக்கினார். அதற்கான பணி முடியவில்லை. பிறகு வந்த தி.மு.க., ஆட்சியில் துணை முதல்வராக இருந்த ஸ்டாலின் பஸ் நிலையத்தை திறந்து வைத்தார். ஒரு சில நாட்கள் மட்டுமே பஸ்கள் உள்ளே சென்றன. அதன்பிறகு பஸ்கள் பஸ் நிலையத்திற்குள் செல்லாமல் வெளியே நின்று சென்றன. அந்த இடம் குறுகலாக இருப்பதால் போக்குவரத்து பாதிப்பதோடு விபத்துகளும் ஏற்படுகிறது. பஸ் நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. அதிகாரிகள் அலட்சியத்தால் ஒருகோடி செலவில் கட்டப்பட்ட பஸ் நிலையம் சமூக விரோதிகளின் கூடாரமாகவும், லாரிகள் நிறுத்தும் இடமாகவும் மாறியுள்ளது. இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: பஸ்கள் உள்ளே வராததால் கடைகளும் மூடியே கிடக்கிறது. இந்நிலையில், 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பஸ் நிலையத்திற்கு வட்டார போக்குவரத்து அலுவலரிடம் அனுமதியை புதுப்பிக்க வேண்டும். இதற்காக நகராட்சி நிர்வாகம், 20 லட்சம் செலவில் பராமரிப்பு பணிகள் செய்து பணத்தை வீணாக்கினர். சமீபத்தில், பஸ் நிலையத்தை ஆய்வு செய்த நகராட்சி நிர்வாகத்துறை இயக்குனர் மதுசூதனன்ரெட்டி, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில் குமார் ஆகியோர் பஸ் நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர உத்தர விட்டனர். இதன் பிறகாவது பஸ் நிலையம் பயன்பாட்டிற்கு வருமா என மக்கள் ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை