உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  பண்ருட்டியில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்க எதிர்ப்பு; வியாபாரிகள் மனு

 பண்ருட்டியில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்க எதிர்ப்பு; வியாபாரிகள் மனு

கடலுார்: பண்ருட்டியில் தற் காலி க பஸ் நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பஸ் நிலைய வியா பாரிகள் நலச் சங்கத்தினர் கலெக்டரிடம் மனு அளித்தனர். பண்ருட்டி பஸ் நிலைய வியாபாரிகள் நலச்சங்கத்தினர் நேற்று கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் கொடுத்த மனுவில்; பண்ருட்டியில் கடந்த பிப்ரவரி மாதம், பஸ் நிலையத்திலுள்ள பழைய கடை களை இடித்து புதுக்கடைகள் கட்டும் பணி துவங்கியது. கட்டுமான பணிக்காக 75 சதவீத இடத்தை தகடு வைத்து அடைத்துள்ளனர் . ஆறு மாதத்தில் பணிகள் முடியும் என கூறியிருந்து நிலையில், 10 மாதங்கள் ஆகியும் 20சதவீத பணிகள் கூட முடியவில்லை. இதனால் கடை வியாபாரிகள் கடும் பாதிப்படைந்துள்ளனர். தற்போது பஸ் நிலைய தரையை சரிசெய்கிறோம் எனக்கூறி வேறு இடத்தில் தற்காலிக பஸ் நிலையம் அமைத்து, பஸ் நிலைய வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை நசுக்கும் வகையில் செயல்படுகின்றனர். எனவே சில்லறை வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் தற்காலிக பஸ் நிலையம் அமைப்பதை கைவிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை