உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  புவனகிரி தாலுகா அலுவலகத்தில் தொழிலாளர் சங்கம் ஒப்பாரி போராட்டம்

 புவனகிரி தாலுகா அலுவலகத்தில் தொழிலாளர் சங்கம் ஒப்பாரி போராட்டம்

புவனகிரி: புவனகிரியில் தாலுகா அலுவலகத்தில் அகில இந்திய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஒப்பாரி போராட்டம் நடந்தது. கீழ்வளையமாதேவி கிராமத்தில் 2011ல் கொடுக்கப்பட்ட குடிமனை பட்டாவை வருவாய் துறை கணக்கில் பதிவேற்றம் செய்ய வேண்டும். வளையமாதேவி மாதா கோவில் அருகில் நிழற்குடை அமைக்க வேண்டும், 1990ம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் குடிமனை பட்டா விற்காக எடுக்கப்பட்ட இடத்தில் குடியிருக்கும் மக்களுக்கு மனைப்பட்டா, மின்சார வசதி கொடுக்க வேண்டும். புவனகிரி அடுத்த கீழ் வளையமாதேவி கிராமத்தில் உள்ள 20 ஏக்கர் தரிசு நில ஆக்கிரமிப்பு அகற்றி, மனு கொடுத்த அனைவருக்கும் குடிமனை பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி, கடந்த ஜூலை மாதம் 31ம் தேதி, புவனகிரி தாலுகா அலுவலகத்தில், கந்தவர்வகோட்டை எம்.எல்.ஏ., சின்னதுரை தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. அப்போது, தாசில்தாராக இருந்த அன்பழகன், கோரிக்கை நிறைவேற்றுவதாக எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் அளித்தார். ஆனால், இதுவரை நிறைவேற்ற வில்லை. இதனை கண்டித்து, அகில இந்திய தொழிலாளர் சங்கம் சார்பில் ஒப்பாரி போராட்டம் நேற்று நடந்தது. மாவட்டத் தலைவர் ரமேஷ்பாபு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பிரகாஷ், பொருளாளர் கிருஷ்ணன், கிளை தலைவர் லட்சுமிகாந்தன், மாவட்ட நிர்வாகிகள் மணி, நெடுஞ்சேரலாதன் மற்றும் பெண்கள் பங்கேற்றனர். மீண்டும் தாசில்தாரை சந்தித்து மனு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை