உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மின்வாரிய தொழிலாளர்கள் தர்ணா

மின்வாரிய தொழிலாளர்கள் தர்ணா

மின்வாரிய தொழிலாளர்கள் தர்ணாதர்மபுரி, தர்மபுரி, மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன், சி.ஐ.டி.யு., மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் மகேந்திரன் தலைமை வகித்தார். இதில், தேர்தல் வாக்குறுதிபடி, மின்வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மின்வாரியத்திலுள்ள காலி பணியிடங்களில், ஒப்பந்த தொழிலாளர்களை கொண்டு நிரப்ப வேண்டும். 2 ஆண்டுகளில், 480 நாட்கள் பணி முடிந்த ஒப்பந்த தொழிலாளர்களை அடையாளம் கண்டு, கருணை தொகை வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநில செயலாளர் கோவிந்தராஜ், சி.ஐ.டி.யு., மாநில செயலாளர் நாகராசன், மாவட்ட துணைத்தலைவர் முரளி உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ