உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  . திறந்த வெளிகளில் மது குடிப்போரால்... தொல்லை இல்லாமல் மக்கள் தவிப்பு

 . திறந்த வெளிகளில் மது குடிப்போரால்... தொல்லை இல்லாமல் மக்கள் தவிப்பு

மாவட்டத்தில் கொடைக்கானல், பழநி உள்ளிட்ட பகுதிகளுக்கு வெளி மாவட்ட மாநில சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகின்றனர். இப்பகுதிகளில் பொது இடங்களில் குடிமகன்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. முக்கிய சாலைகளின் உள்ள கடைகளுக்கு முன்புறத்தில் இரவு நேரங்களில் மது குடித்து விட்டு அப்ப பகுதியில் அசுத்தம் செய்து சென்று விடுகின்றனர். விவசாய நிலங்களில் அருகே மது குடித்துவிட்டு வயல்களில் உடைந்த பாட்டில்களை போட்டு செல்கின்றனர். இதனால் வயல் வெளிகளில் வேலை செய்யும் விவசாயிகள் காயமடைகின்றனர். குளத்துக்கரைகள் ,ஆற்றுப் பாலங்கள் ,பஸ் ஸ்டாண்ட் பகுதிகளை மினி பாராகவே குடிமகன்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த போலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பழநி,கொடைக்கானல் சாலையில் அதிக சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றனர். இப்பகுதியில் இருபுறமும் சாலை ஓரங்களில் மது அருந்தும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் மது குடிக்கும் நபர்கள் அரைகுறை ஆடையுடன் படுத்து கிடக்கின்றனர். இதனால் பெண்கள் முகம் சுளிக்கும் நிலை தொடர்கிறது. மேலும் மது போதையில் சிறு சிறு குற்றங்களில் ஈடுபடும் நிலை உருவாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ