உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  கும்பாபிஷேகத்தில் 10 பவுன் நகை திருட்டு

 கும்பாபிஷேகத்தில் 10 பவுன் நகை திருட்டு

நத்தம்: -நத்தம்- அண்ணாநகரில் நடந்த கும்பாபி ேஷகத்தில் பங்கேற்ற இருவரது கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் நகை திருடுபோனது. தேனி-பங்களாமேட்டை சேர்ந்தவர் சோலையம்மாள் 66. நத்தம்-அண்ணாநகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தவர் நேற்று முன்தினம் காலை அப்பகுதியில் நடந்த கும்பாபிஷேகத்தை பார்ப்பதற்காக கூட்டத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவரது கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை திருடி சென்றனர். இதேபோல் அதே பகுதியை சேர்ந்த வீரமணி 72, கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை திருடி சென்றனர். நத்தம் -எஸ்.ஐ., அருண்நாராயணன் விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ