51 மாதங்களில் 20 லட்சம் ரேஷன் கார்டுகள்: அமைச்சர் சக்கரபாணி
ஒட்டன்சத்திரம்: 51 மாதங்களில் 20 லட்சம் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார். ஒட்டன்சத்திரம் ஓடைப்பட்டி ஊராட்சியில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அவர் பேசியதாவது: ரேஷன் கார்டுகள் கோரி விண்ணப்பித்தவர்களில் தகுதி உள்ளவர்களுக்கு 15 நாளில் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 51 மாதங்களில் 20 லட்சம் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் அரசின் திட்டங்கள் அனைத்தும் அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது என்றார். ஆர்.டி.ஒ., கண்ணன், தாசில்தார் சஞ்சய் காந்தி, உதவி திட்ட அலுவலர் பிரபாகரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், காமராஜ், பிரபு பாண்டியன், தி.மு.க., ஒன்றிய செயலாளர் ஜோதீஸ்வரன், பொன்ராஜ், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் ராஜா, செல்வம் கலந்து கொண்டனர்.