உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  காங்., மாவட்ட தலைவர் பதவிக்காக நேர்காணல் நடத்திய பார்வையாளர்

 காங்., மாவட்ட தலைவர் பதவிக்காக நேர்காணல் நடத்திய பார்வையாளர்

எரியோடு: காங்., அமைப்பு மறுசீரமைப்பு இயக்கம் என்ற தலைப்பில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கும் பணி நடக்கிறது. இதற்காக வேடசந்துார் தொகுதியளவில் எரியோட்டில் தேசிய பார்வையாளரான தெலுங்கானா மாநில தலைமை ஆலோசகர் வேணுகோபால் ராவ் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புவோரிடம் மனுக்கள் பெறப்பட்டது. பலர் மற்ற நிர்வாகிகளுக்கு ஆதரவு தெரிவித்து மனுக்கள் தந்தனர். இவர்களை தனித்தனியே அழைத்து மொழி பெயர்ப்பாளர் உதவியுடன் கருத்துகளை கேட்டு பதிவு செய்தார். மாநில செயலாளர் தமிழ்செல்வன், துணை தலைவர் செந்தில்குமார், மாவட்ட தலைவர் சதீஸ்குமார், துணைத் தலைவர் கார்த்திகேயன், தொகுதி இளைஞர் காங்., முன்னாள் தலைவர் எர்ஷாத் அகமது பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ