| ADDED : டிச 07, 2025 05:31 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி, பள்ளி 175 ஆண்டு நிறைவு விழா நடந்தது. பள்ளி நிறுவனர் மரிவளன் தலைமை வகித்தார். மூத்த புரவலர் குப்புசாமி, முன்னாள் மாணவர் சங்க தலைவர் சண்முகம் முன்னிலை வகித்தனர். கே.இன்டேவ் லாஜிஸ்டிக்ஸ் எக்ஸ்பி குரூப் நிறுவனர் சேவியர் பிரிட்டோ, தமிழக பாடநுால் கழகத்தலைவர் லியோனி, டி.ஐ.ஜி., மூர்த்தி, அரசின் சிறப்புத்திட்ட அமலாக்கத்துறை அதிகாரி செபாஸ்டின் பிரிட்டோ ராஜ், மதுரை மாநில இயேசு சபைத்தலைவர் தாமஸ் அமிர்தம், சிங்கப்பூர் இன்போடெக் சிஸ்டம்ஸ் முதன்மை செயல் அலுவலர் திலிப் பாபு, ரோம் வாட்டிகன் நகர உச்சநீதிமன்ற நீதிபதி ஆரோக்கிய ராஜ், ரோட்டரி சங்க முன்னாள் ஆளுநர் தீனச்சந்திரன், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இதயவியல் துறை பேராசிரியர் ராமகிருஷ்ணன், திரைப்பட இயக்குனர்கள் இளவரசு, பாலாஜி சக்திவேல், சீனியர் ஆடிட்டர் வெங்கட ரமணன் பேசினர். கல்வி கற்றுக்கொடுத்த ஆசிரியர்களை கவுரவிக்கும் விதமாக முன்னாள், இந்நாள் ஆசிரியர்களை அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஏற்றி நகரின் முக்கிய வீதிகள் வழியாக மேளதாளங்கள் முழங்க ஆட்டம் பாட்டத்துடன் ஊர்வலமாக அழைத்து வந்தனர். பங்கேற்ற ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.