| ADDED : நவ 14, 2025 04:46 AM
கால்நடைகளால் இடையூறு திண்டுக்கல் - திருச்சி ரோடு செட்டி நாயக்கன்பட்டி பிரிவு ரோட்டில் சுற்றி திரியும் கால்நடைகளால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது.வாகனங்களில் செல்வோரும் விபத்துக்களில் சிக்குகின்றனர். இதன் மீது மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். செல்வி, திண்டுக்கல்........--------- சேதமான சுற்றுச்சுவர் திண்டுக்கல் மேட்டுப்பட்டி மேல்நிலை தண்ணீர் தொட்டி சுற்றுச்சுவர் சேதமடைந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதியில் கடந்து செல்வோர் அச்சத்துடன் செல்கின்றனர் .சுற்று சுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.லாரன்ஸ், மேட்டுப்பட்டி. ...........--------- பயமுறுத்தும் பாலம் திண்டுக்கல் கிழக்கு ஆரோக்கிய மாதா தெருவில் சாக்கடை தரை பாலம் சேதமடைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது .இரவு நேரங்களில் பள்ளம் தெரியாமல் விபத்துக்கள் நடக்கிறது. பாலத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.மகேந்திரன், திண்டுக்கல். .........--------- குப்பையை கொட்டி தீ வடமதுரை அண்ணா நகர் அங்கன்வாடி அருகில் பிளாஸ்டிக் கழிவுகளுடன் குப்பையை கொட்டி துாய்மை பணியாளர்கள் தீவைப்பதால் சுற்றுப்பகுதி மக்கள் பாதிப்படைகின்றனர். இதன் மூலம் சுற்றுச்சுழலும் பாதிக்கிறது .-- சுப்பையா, வடமதுரை. ..........--------- மிரட்டும் மின்கம்பம் முள்ளிப்பாடி பாறையூர் ஐஸ்வர்யா நகரில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து விழும் நிலையில் உள்ளது .இதன் அருகில் வீடுகள் உள்ள நிலையில் விபத்து ஏற்படும் சூழல் ஏற்படுகிறது .புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும். ஆறுமுகம் குழந்தை, முள்ளிப்பாடி. ...............---------அலட்சியத்தால் அவதி ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் டி.புதுப்பட்ட ஊராட்சி காப்பிளியபட்டியில் திடக்கழிவு மேலாண்மையில் அலட்சியத்தால் எஸ்.பி.ஐ., காலனி அருகே குவிக்கப்படும் கழிவுகள் சுகாதாரக் கேட்டை ஏற்படுத்தி வருகிறது. -சு.சாமிநாதன், காப்பிளியபட்டி. .............--------- ரோட்டில் ஓடும் கழிவு நீர் குஜிலியம்பாறை தாலுகா நாகையன்கோட்டை கிராமம் புது ரோட்டில் சாக்கடை வசதி இல்லாமல் கழிவுநீர் ரோட்டில் செல்கிறது .இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது . கழிவுநீர் ஓடை கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். சவடமுத்து, புதுரோடு. ............---------