உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  முருகன் கோயிலில் கும்மி நடனம்

 முருகன் கோயிலில் கும்மி நடனம்

வேடசந்துார்: ஜி.நடுப்பட்டி ஊராட்சி நடுப்பட்டியில் உள்ள வெள்ளிமலை முருகன் கோயிலில் தேரோட்டம் நடந்தது. நடுப்பட்டி ,கன்னடம்பட்டி உள்ளிட்ட கிராம மக்கள், வெள்ளிமலையை சுற்றி கிரிவலம் வந்து முருகன், வள்ளி, தெய்வானை உள்ளிட்ட தெய்வங்களை தரிசனம் செய்தனர். இதை தொடர்ந்து கிராமப் பெண்களின் கும்மியாட்டம் நடந்தது. முன்னாள் ஊராட்சி தலைவர் ரவிச்சந்திரன், கன்னடம்பட்டி மாரியம்மன் கும்மி கலைக்குழுவின் தலைவர் வெள்ளைக்காளை, நடுப்பட்டி ஊர் முக்கியஸ்தர் ஜெயராமன், வெள்ளிமலை முருகன் கோயில் நிர்வாகி மகுடீஸ்வரன். கும்மி நடன பயிற்சியாளர் வடிவேல் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை