உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மலைப்பகுதியில் பலா சீசன் துவக்கம்

மலைப்பகுதியில் பலா சீசன் துவக்கம்

தாண்டிக்குடி : தாண்டிக்குடி மலைப் பகுதியில் பலா சீசன் துவங்கியுள்ளது.திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி கீழ்மலைப்பகுதிகளான புல்லா வெளி, கானல்காடு, தடியன்குடிசை, தாண்டிக்குடி, பூலத்தூர், கும்பறையூர், வாழைகிரி, பண்ணைக்காட்டில் ஏராளமான ஏக்கரில் காபிக்கு இடையே ஊடுபயிராக பலா சாகுபடி செய்யப்படுகிறது. பண்ரூட்டி, சிறுமலை பலா பழங்களுக்கு நிகராக இங்கு விளைச்சல் காணும் பலா ருசியாக இருப்பதால் வியாபாரிகள் விரும்பி வாங்கி செல்கின்றனர். மேலும் பலா பிஞ்சுகளும் சமையல் பயன்பாட்டிற்கு அனுப்படுகிறது. ஜூன் மாதம் துவங்கும் சீசன் செப்டம்பர் வரை நீடிக்கும். பழங்கள் தரத்திற்கேற்றார் போல் ரூ. 150 முதல் 200 வரை விலை போகிறது. நடப்பாண்டில் நிலவிய சீதோஷ்ண நிலையால் மரங்களில் காய்கள் கொத்து கொத்தாக காய்த்துள்ளது குறிப்பிடதக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை