| ADDED : டிச 02, 2025 07:29 AM
பழநி: பழநி பகுதியில் சாலையோரம் கொட்டப்படும் பிளாஸ்டிக் குப்பையால் இதை உண்ணும் கால் நடைகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இதை கருதி பழநி ஆன்மிக ஸ்தலங்களுக்கு பிளாஸ்டிக் கவர்களை எடுத்து வர தடை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பழநி முருகன் கோயிலுக்கு தற்போது சபரிமலை ஐயப்ப பக்தர்கள் அதிகம் வருகின்றனர். இதனால் பழநி அடிவாரம் பகுதியில் தற்காலிக ,நிரந்தர கடைகள் அதிக அளவில் உருவாகி வருகிறது. இதில் தள்ளுவண்டி கடைகள், திடீரென உருவாகியுள்ள ஓட்டல்களில் அதிக அளவில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் நகரின் சுகாதாரம் கெடுகிறது. வெளியூரிலிருந்து வரும் பக்தர்கள் கொண்டு வரும் பிளாஸ்டிக் பொருட்களால் நகரில் பிளாஸ்டிக் குப்பை அளவு அதிகரிக்கிறது. அதிகரிக்கும் குப்பையை முறையாக அப்புறப்படுத்தாமல் சாலையோரம் கொட்டப்படுவதால் சாலைகளில் திரியும் ஆடு, மாடுகள் அவற்றை உட்கொள்கின்றன. இதில் தடை பிளாஸ்டிக் பொருட்களும் கால்நடைகளின் வயிற்றுக்குள் செல்வதால் உடல் நலக்கோளாறு ஏற்படுகிறது .இதனால் கால்நடைகள் பாதிப்பை சந்திக்கின்றன. பிளா ஸ்டிக் தவிர்ப்போம் செ ந்தில் குமார், அலைபேசி கடை உரிமையாளர், பழநி : தடை பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக வாழை இலை, மஞ்சள் துணிப்பை, சில்வர் தட்டுகள் கரும்பு சக்கை தட்டுகள், சில்வர் கப், கண்ணாடி கப் பயன்படுத்த வேண்டும். கறிக்க டைகளில் கருப்பு நிற பிளாஸ்டிக் கவர்களை தவிர்த்து தாமரை, வாழை, பயன்படுத்த வேண்டும். காய்கறி கடை, பழக்கடைகளில் மக்காத பிளாஸ்டிக் கவர்கள் பதிலாக மக்கும் கேரி கவர், துணிப்பை, மக்கும் பேப்பர் பை, சணல் கயிறு ஆகியவற்றை பயன்படுத்தலாம். சாலையிலே கொட்டப்படும் குப்பையால் தெருவில் திரியும் கால்நடைகளால் விபத்து ஏற்படுகிறது. சாலைகளில் கால்நடைகள் திரிவதை உரிமையாளர்கள் கண்காணிக்க வேண்டும். குப் பை கொட்ட தனி இடம் ராஜா முகமது, தலைவர், விசுவாசம் அறக்கட்டளை : பழநியில் தடை பிளாஸ்டிக் விற்பனைக்கு முழு தடை தேவை. குப்பை பிரிக்க தகுந்த உபகரணங்கள் வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளுக்கு குப்பை கொட்டும் இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். குப்பையில் கிடக்கும் பிளாஸ்டிக்கை கால்நடைகள் தின்று உடல்நல கேடு ஏற்படுகிறது. பொதுமக்கள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும். இதோடு சாலையோரம் குப்பை கொட்டுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் தீர்வு: பழநி நகருக்குள் வெளியூரிலிருந்து வரும் நபர்கள் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வருவதை கட்டுப்படுத்த கண்காணிப்பு மையங்கள் அமைக்க வேண்டும். சுற்றுலா வாகனங்களை சோதனை செய்து பிளாஸ்டிக் பொருட்களை நகருக்கு வெளியே பறிமுதல் செய்து அப்புறப்படுத்த வேண்டும். பழநி ந கரில் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் வணிகர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் தடை பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் கடைகளுக்கு அதிக அளவில் அபராதம் விதித்து பொருட்களை பறிமுதல் வேண்டும். சாலையோரம் திரியும் கால்நடைகளின் உரிமையாளர்களை கண்டறிந்து அறிவுரை வழங்க வேண்டும்.