உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஆக்கிரமிப்பு வீடை அகற்ற எதிர்ப்பு

ஆக்கிரமிப்பு வீடை அகற்ற எதிர்ப்பு

வேடசந்துார் : திண்டுக்கல் முருநெல்லிக்கோட்டை வானிலை மையம் அருகே புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமித்து கட்டிய வீட்டை அதிகாரிகள் இடிக்க முயன்ற நிலையில் வீட்டு உரிமையாளர், வழக்கறிஞர் தடுத்ததால் ஒரு வார கால அவகாசம் கொடுத்து திரும்பினர். முருநெல்லிக்கோட்டை காமாட்சிபுரத்தை சேர்ந்தவர் கண்ணன் மனைவி சிட்டம்மாள் 60. தமிழ்நாடு அரசு நீர்வளத்துறை முழு வானிலை நிலையம் அருகே, புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார். இவர்களது வீடு வானிலை நிலையத்தை யொட்டி இருப்பதால் கருவிகளின் செயல்பாடுகள் தடைப்படுவதால் பாதிக்கப்படுவதாகவும், அப்பகுதியில் உள்ள தனியார் கோயிலுக்கு செல்ல இடையூறாக உள்ளதாக மாவட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று திண்டுக்கல் மேற்கு தாசில்தார் ஜெயபிரகாஷ், வேடசந்துார் இன்ஸ்பெக்டர் வேலாயுதம், தீயணைப்பு நிலைய அலுவலர் ஜேம்ஸ் அருள் பிரகாஷ் தலைமையிலான அதிகாரிகள், போலீசார், மண் அள்ளும் இயந்திரத்துடன் சென்றனர். வீட்டின் உரிமையாளர், வழக்கறிஞர் ஆகியோர் கால அவகாசம் கொடுக்காமல் இடிக்க வந்ததால் அனுமதிக்க மாட்டோம் என வாக்குவாதம் செய்தனர். இதை தொடர்ந்து பேசிய தாசில்தார், ஒரு வாரம் அவகாசம் கொடுப்பதாகவும் ஆ.11க்குள் வீட்டை அகற்றி விட வேண்டும் என கெடு விதித்து திரும்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை