உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  வாடகை கட்டடத்தில் வி.ஏ.ஓ., அலுவலகம் கட்டடம் இருந்தும் கண்டுகொள்ளாத வருவாய்த்துறை

 வாடகை கட்டடத்தில் வி.ஏ.ஓ., அலுவலகம் கட்டடம் இருந்தும் கண்டுகொள்ளாத வருவாய்த்துறை

தாண்டிக்குடி: தாண்டிக்குடி கே.சி. பட்டியில் வி.ஏ.ஓ., அலுவலக கட்டடம் இருந்தும் வாடகை கட்டடத்தில் செயல்படும் அவலம் தொடர்கிறது. கே. சி. பட்டி வி.ஏ.ஓ., அலுவலகம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகே செயல்பட்டது 10 ஆண்டுகளுக்கு முன் கட்டமைக்கப்பட்ட இக்கட்டடத்தின் கூரை சேதமடைந்து சுவர்களில் விரிசல் ஏற்பட்டு விபத்து அபாயத்தில் இருந்தது. இதையடுத்து இரு ஆண்டுகளுக்கு முன் வி.ஏ.ஓ., அலுவலகத்தை தற்காலிகமாக வாடகை கட்டடத்தில் செயல்படுத்தி வந்தனர். தொடர்ந்து கட்டடத்தை சீரமைத்து அலுவலகத்தை செயல்படுத்த கோரிக்கையை விடுத்த போதும் நடவடிக்கையின்றி இரு ஆண்டுகளை கடந்தும் வாடகை கட்டடத்திலே அலுவலகம் செயல்படுகிறது. பழைய கட்டடம் மேலும் சிதிலமடைந்து இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. மாவட்ட நிர்வாகம் சேதமடைந்துள்ள அலுவலகத்தை இனியாவது சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி