உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  பள்ளிகளுக்கு இடையே மாநில கால்பந்து போட்டி

 பள்ளிகளுக்கு இடையே மாநில கால்பந்து போட்டி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழகம்,புனித மரியன்னை முன்னாள் மாணவர்கள் இயக்கம் இணைந்து நடத்தும் பள்ளிகளுக்கிடையான முதலாவது டாக்டர் சேவியர் பிரிட்டோ எக்ஸ்.பி., குரூப் கால்பந்து போட்டிகள் நடந்து வருகின்றன. நாளை வரை நடக்கும் இப்போட்டி புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நாக் அவுட் முறையில் நடக்கிறது. புனித மரியன்னை பள்ளியின் 175-வது ஆண்டு விழா , புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர் இயக்க 75-வது ஆண்டு விழாவினை முன்னிட்டு நடக்கும் இப்போட்டியில் முதலிடம் பெறும் அணிக்கு சுழற்கோப்பை, ரூ.20,000, 2ம் அணிக்கு பரிசுப்கோப்பை, ரூ.15,000, மூன்றாம் இடம் பெறும் அணிக்கு பரிசுப்கோப்பை, ரூ 10,000, 4ம் இடம் பெறும் அணிக்கு பரிசுப்கோப்பை, ரூ.7,500 வழங்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை