உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கடித்த பாம்புடன் வந்த தொழிலாளி

கடித்த பாம்புடன் வந்த தொழிலாளி

வேடசந்தூர்: வேடசந்தூர் உசிலம்பட்டி கூலி தொழிலாளி மச்சக்காளை 65. அங்குள்ள தனியார் தோட்டத்தில் கம்பி வேலி அமைக்கும் பணிக்காக கல்தூண் நடும் போது 4 அடி நீளம் கொண்ட கட்டு விரியன் பாம்பு, மச்சக்காளையின் காலில் கடித்தது. உடனிருந்தவர்கள் பாம்பை அடித்து சாக்குப் பையில் போட்டுக்கொண்டு, மச்சக்காளையை வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !