உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

 குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

எரியோடு: எரியோட்டில் காவிரி கூட்டு குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் ரோட்டில் பாய்வதால் ரோடும் பாதிப்படைந்து வருகிறது. கரூர் காவிரி ஆற்றில் இருந்து குழாய் மூலம் திண்டுக்கல் மாவட்டத்திற்கான குடிநீர் குஜிலியம்பாறை, எரியோடு வழியே ரோடு ஓரம் பதிக்கப்பட்ட குழாய்கள் வழியே கொண்டு வரப்படுகிறது. சில இடங்களில் ரோடு ஓரங்களில் இடம் இல்லாத நிலையில் ரோட்டிற்கு கீழே குழாய் பாதை பதிக்கப்பட்டுள்ளது. இவ்வகையில் எரியோட்டில் கோவிலுார் ரோட்டின் கீழே பாதிக்கப்பட்டுள்ள காவிரி கூட்டு குடிநீர் குழாய் உடைந்து நீர் வீணாகிறது. இதனால் ரோடு பாதிப்படைந்து வருகிறது. இப்பகுதியில் சீரமைப்பு பணி செய்ய தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை