உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குறைதீர் கூட்டத்தில் 230 மனுக்கள் ஏற்பு

குறைதீர் கூட்டத்தில் 230 மனுக்கள் ஏற்பு

ஈரோடு, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கந்தசாமி தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. மகளிர் உரிமைத்தொகை, கருணை அடிப்படையில் வேலை, கல்வி உதவித்தொகை, போலீஸ் நடவடிக்கை உட்பட பல்வேறு கோரிக்கை தொடர்பாக, 230 மனுக்கள் பெறப்பட்டு, அந்தந்த துறை விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தமிழ் வள்ச்சி துறை சார்பில் சமீபத்தில் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியருக்கு நடத்தப்பட்ட கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற, 18 பேருக்கு பரிசு, பராாட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. டி.ஆர்.ஓ., சாந்தகுமார், தமிழ்நாடு வளர்ச்சி துறை துணை இயக்குனர் ஜோதி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மான்விழி, சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் செல்வராஜ், மாவட்ட வழங்கல் அலுவலர் ராம்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை