உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சாலையோர கடைகள் அமைக்க தடை போலீசுக்கு பட்டியல் தந்த மாநகராட்சி

சாலையோர கடைகள் அமைக்க தடை போலீசுக்கு பட்டியல் தந்த மாநகராட்சி

ஈரோடு, ஈரோடு மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகள் வியாபாரம் செய்ய, நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான சாலைகள், ப.செ.பார்க் முதல் எல்லை மாரியம்மன் கோவில் வரையிலான சாலை இருபுறமும், காவிரி சாலை காமராஜர் மேல்நிலை பள்ளி முதல் டவுன் போலீஸ் ஸ்டேஷன் வரை சாலையின் இருபுறமும், ப.செ.பார்க் முதல் தலைமை தபால் நிலையம் வரை சாலையின் இருபுறமும் அமைக்க கூடாது.காளை மாட்டு சிலை மாநகராட்சி வணிக வளாக பகுதி முழுவதும், எம்.எஸ். சாலையில் ப.செ.பார்க் முதல் ஆர்.டி.கே. அலுவலகம் வரை, எம்.எஸ். சாலையில் தொலைபேசி அலுவலக வளாக பகுதி முழுவதும் அமைக்க கூடாது. பவானி சாலை முதல் வ.உ.சி. பூங்கா சாலையில் இருபுறமும், வீரபத்ர வீதியில் மாவட்ட மைய நுாலக சாலை முதல் ஸ்வஸ்திக் ரவுண்டானா வரை, மேட்டூர் சாலையில் ஸ்வஸ்திக் ரவுண்டானா முதல் அரசு மருத்துவமனை வரை சாலையில் இருபுறமும் அமைக்க கூடாது. ஈரோடு பஸ் ஸ்டாண்ட், கலெக்டர் அலுவலகம் முதல் சம்பத் நகர் பிரதான சாலை இருபுறமும், சம்பத் நகர் மெயின் ரோட்டில் இருந்து உழவர் சந்தை வரை சாலையின் இருபுறமும், சம்பத் நகர் முதல் நாராயண வலசு வரை சாலையின் இருபுறமும், சாலையோர கடைகள் அமைக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதுபற்றி மாநகராட்சி நிர்வாகம், போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளது. ஆனால் இது எப்போது அமலுக்கு வருகிறது என்று அறிவிப்பு ஏதுமில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை