உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அமைச்சரை வரவழைத்ததால் சுத்த வெச்சுட்டாங்களோ? மாநகராட்சி மக்கள் குமுறல்

அமைச்சரை வரவழைத்ததால் சுத்த வெச்சுட்டாங்களோ? மாநகராட்சி மக்கள் குமுறல்

ஈரோடு, ஈரோடு மாநகராட்சி எட்டாவது வார்டு நந்தவனதோட்டம் நான்காவது வீதியில், தார்ச்சாலை அமைக்கும் பணிக்காக, எல்.பி.பி., வாய்க்கால் கசிவுநீர் கால்வாய் மீது செல்லும் கற்களை அகற்றியதால், குடியிருப்பு பகுதியில் இருந்து டூவீலர், இலகு ரக வாகனங்களில் செல்ல முடியாமல், மக்கள் முடங்கியுள்ளனர்.இதுகுறித்து அப்பகுதி குடியிருப்புவாசிகள் கூறியதாவது: எங்களது வீதியில், 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. தார்ச்சாலை முற்றிலும் சேதமானதால், புதிதாக அமைக்க பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.இதனால் கண்டன பேனர் வைத்தபோது, அமைச்சர் முத்துசாமி நேரில் வந்து, எங்களிடம் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.சாலை அமைத்து தருவதாக உறுதியளித்த பிறகு பேனரை அகற்றினோம். நான்கு நாட்களுக்கு முன்பு சாலை அமைக்க, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது எல்.பி.பி., வாய்க்கால் கசிவுநீர் கால்வாய் மீது செல்லும் கற்களை அகற்றி போட்டனர்.சாலை அமைத்த பிறகு மீண்டும் கற்களை தரைப்பாலம் போல் வைத்து தருகிறோம் என்று கூறி சென்றனர். இதுவரை பணியை தொடங்கவில்லை.இதனால் இருசக்கர வாகனத்தில் வெளியே செல்லமுடியாமல் தவிக்கிறோம். தற்காலிகமாக தனியார் நிலத்தின் வழியாக பிற பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ