உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பழங்குடி தொழில் முனைவோருக்கு சமமான வாய்ப்பு; எம்.பி., கோரிக்கை

பழங்குடி தொழில் முனைவோருக்கு சமமான வாய்ப்பு; எம்.பி., கோரிக்கை

ஈரோடு: துறைமுகங்கள், கப்பல், நீர் வழிகள் துறைக்கு, ஈரோடு தி.மு.க., - எம்.பி., பிரகாஷ் அனுப்பிய கேள்வியில், 'மத்திய அரசின் 'சாகர் சாமஜிக் சஹயோக்' திட்டத்தில், சி.எஸ்.ஆர்., நிதி, 116 கோடி ரூபாய் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. இதனால் கடலோர மக்களுக்கு பயனற்றுள்ளது' குறித்து தெரிவித்திருந்தார். பாராளுமன்ற கூட்டத்தில் இதற்கு அத்துறை பதிலில், 'பல துறைமுகங்களில், 78, 80, 52 சதவீதம் வரை நிதி பயன்படுத்தப்படாமல் முடக்கி வைத்திருப்பதும், அதை மதிப்பீடு செய்யாமல் இருப்பதும்' தெரிய வந்தது. இதற்கு எம்.பி., பிரகாஷ் அனுப்பிய கடிதத்தில், 'சி.எஸ்.ஆர்., நிதியை முழுமையாக பயன்படுத்தாமல் இருப்பது, கடலோர மக்களுக்கு இழைக்கும் அநீதி. 116 கோடி வரை உள்ள நிதியை, கடலோர மக்களின் கல்வி, சுகாதாரம், வாழ்வு மேம்பாட்டுக்கு பயன்படுத்த வேண்டும்' என கேட்டு கொண்டார். அதுபோல 'பழங்குடியின தொழில் முனைவோருக்கான முதலீட்டு உதவி திட்டத்தில் தமிழகத்துக்கான பயன். வி.சி.எப்., -எஸ்.டி.,' கீழ் ஆதரவு பெற்ற தமிழக பயனாளிகள் எண்ணிக்கை' குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். அதில், 'தமிழகத்தில் எந்த பயனாளியும் இல்லை' என மத்திய பழங்குடி விவகாரத்துறை பதில் வழங்கியது. அதற்கு எம்.பி., பிரகாஷ், அனுப்பிய கடிதத்தில் கூறியதாவது: இத்திட்டம், 2024ல் துவங்கி, சத்தீஸ்கர், தெலுங்கானாவில் இரு நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதை ஆய்வு செய்ய வேண்டும். தமிழகத்தில் பழங்குடியினர், 8 லட்சத்துக்கும் அதிகம் உள்ளனர். தமிழகத்தின் பழங்குடி மண்டலமான நீலகிரி, கோவை மாவட்டங்களில் நடக்கும் தொழில் முனைவோர் நிகழ்வுகளில் அதிகமாக பங்கேற்கின்றனர். அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான ஆதரவு, நிதி, தொழில் வாய்ப்பு வழங்க வேண்டும். பழங்குடியினர் விவகாரத்துறை மறுபரிசீலனை செய்து அவர்களுக்கு சமமான வாய்ப்பு தர வேண்டும், என்று கேட்டுக்கொண்டார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ