| ADDED : டிச 02, 2025 02:35 AM
ஈரோடு, 'போலி பல்கலை கழகங்களால் மாணவர்கள் எதிர்காலம் வீணாகிறது. அதற்கு என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது' என ஈரோடு தி.மு.க., - எம்.பி., பிரகாஷ், பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். அதற்கு மத்திய கல்வித்துறை இணை அமைச்சர், 'போலி பல்கலை கழகங்கள், மாணவர்களின் எதிர்காலம் குறித்த தனியாக உறுதியான திட்டங்கள் இல்லை' என்று பதில் அளித்தார். இதை தொடர்ந்து எம்.பி., பிரகாஷ், கல்வி அமைச்சகத்துக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது: போலி பல்கலை கழகங்களில் சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி தொடர்ச்சி, இழப்பீடு வழங்க திட்டம் தேவை. இதுபற்றி எடுக்கப்படும் நடவடிக்கையை யூ.ஜி.சி., இணையதளத்தில் பட்டியலிட வேண்டும். இன்றைய நிலையில் போலி பல்கலை கழகங்களின் பட்டியல் நீழ்கிறது. ஏமாற்றப்பட்ட மாணவர்களுக்கு இழப்பீடு வழங்குவதுடன், அவர்கள் படிப்பை தொடர, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் சிறப்பு சேர்க்கை வழங்குவது பற்றி தெளிவான திட்டத்தை அறிவிக்க வேண்டும். எதிர் காலத்தில் போலி பல்கலை கழகங்கள், கல்வி நிறுவனங்கள் உருவாகாமல் தடுக்க வரையறை கொண்டு வர வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.