உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தரமற்ற விதை விற்ற 52 நிறுவனம் நடவடிக்கைக்கு அதிகாரி பரிந்துரை

தரமற்ற விதை விற்ற 52 நிறுவனம் நடவடிக்கைக்கு அதிகாரி பரிந்துரை

ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் விதை விற்பனை நிறுவனங்களில், தரமற்ற விதை விற்பனை செய்வதை கண்டறிய, விதை ஆய்வு துணை இயக்குனர் சுமதி தலைமையில் ஆய்வு செய்து, வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:பயிர் சாகுபடிக்கு தேவையான விதைகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் உற்பத்தி செய்து, பரிந்துரைக்கப்பட்ட பகுதிகளில் விற்கப்படுகிறது. தரமான, சான்றளிக்கப்பட்ட விதைகள் விவசாயிகளுக்கு வழங்குவதை உறுதி செய்ய ஆய்வு செய்யப்படுகிறது.இதன்படி ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டம் தாராபுரம், காங்கேயம் பகுதிகளில் விதை மாதிரி சேகரித்துஆய்வு செய்யப்பட்டது. மொத்தம், 3,123 விதை மாதிரிகளின் முளைப்பு திறன், இனத்துாய்மை, பிடி பரிசோதனை செய்யப்பட்டது. அவற்றுடன், 1,618 நெல் விதை மாதிரி, 696 மக்காசோளம், 337 பருத்தி, 104 பயிர் வகை, 418 காய்கறி பயிர்களின் விதைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.இதில், 52 விதை மாதிரி தரமற்றது என அறிக்கை பெறப்பட்டது. இதில், 19 நெல் விதை மாதிரி, 23 மக்காசோளம், 10 காய்கறி விதையாகும். இதன்படி ஈரோடு மாவட்டத்தில் இதுவரை, 47 விதை விற்பனை நிலையங்கள் மீது துறை நடவடிக்கை, ஐந்து நிறுவனங்கள் மீது நீதிமன்ற நடவடிக்கை தொடரப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை