மேலும் செய்திகள்
வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு கூட்டம்
7 minutes ago
மின்சாரம் தாக்கி மக்னா யானை பலி
8 minutes ago
திரிஷாவுக்கு பெண் குழந்தை
10 minutes ago
தமிழ்நாடு தொடக்க கைத்தறி விசைத்தறி கூட்டுறவு நெசவாளர் சங்கங்களின் கூட்டமைப்பில், 184 கூட்டுறவு விசைத்தறி சங்கங்களில், லட்சக்கணக்கான நெசவாளர் பயனடையும் வகையில், தமிழக அரசு இலவச வேட்டி, சேலைகளை கூலிக்கு நெய்து தரும் ஆர்டர்களை துணி நுால்துறை மூலம் வழங்கி வருகிறது. இதன்படி, 2026ம் ஆண்டுக்கு, ஒரு கோடியே, 77 லட்சம் வேட்டி, ஒரு கோடியே, 62 லட்சம் சேலைகளுக்கு ஆர்டர் தந்தது. இதுவரை, 99.5 சதவீதம் தயாரிக்கப்பட்டு, துணி நுால் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.அரசு நுாற்பாலை வழங்கும் வார்ப்பு நுாலில் ஏற்பட்ட கலப்பு விகிதத்தால் சற்று மாறுபாடு ஏற்பட்டிருந்தது. இதை அறியாமல் கைத்தறி துறை இயக்குனரின் தவறான உத்தரவால், 13 லட்சம் வேட்டிகளை கொள்முதல் செய்யாமல் கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனால் நெசவாளர்களுக்கு சேர வேண்டிய, 80 கோடி ரூபாய் கூலித்தொகையும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த வேட்டிகள் தரமானவை; எனவே நிலுவையை விடுவித்து தருமாறு, கூட்டமைப்பு சார்பில் துணி நுால் துறை அமைச்சர் காந்தி, வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி, ஈரோடு எம்.பி., பிரகாஷ் மற்றும் சமீபத்தில் ஈரோடு வருகை தந்த முதல்வர் ஸ்டாலினிடம் நேரில் கோரிக்கை விடுத்தோம். இதன் அடிப்படையில், 13 லட்சம் வேட்டிகளை கொள்முதல் செய்து, 80 கோடி ரூபாயை அதிகாரிகள் விடுவித்து தர முடிவு செய்திருந்தனர். இந்நிலையில் அ.தி.மு.க., பொது செயாளர் பழனிச்சாமி, கடந்த, -௪ம் தேதி விடுத்த தவறான அறிக்கையால், நெசவாளர்களின் கோரிக்கையை அதிகாரிகள் நிராகரிக்கும் முடிவில் இருப்பதாக தெரிய வருகிறது. நெசவாளர் நலனுக்கு எதிராக தவறான புள்ளி விவரங்களை அறிக்கையாக வெளியிட வேண்டாம் என, அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமியை கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
7 minutes ago
8 minutes ago
10 minutes ago