உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / குழந்தையுடன் இளம்பெண் மாயம்

குழந்தையுடன் இளம்பெண் மாயம்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே குழந்தையுடன் மாயமான இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி அடுத்த கனங்கூரைச் சேர்ந்த கார்த்திக் மனைவி ரோகினி,23; இவரது கணவர் கார்த்திக் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். கடந்த 20 ம் தேதி இரவு 10 மணி முதல் ரோகினி, அவரது மகன் ரித்திக்,4; ஆகியோர் காணாமல் போனது தெரிந்தது. இதனையடுத்து அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்காததையடுத்து போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து குழந்தையுடன் மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை