உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பூஜை பொருட்கள் திருடிய இரு பெண்கள் கைது

பூஜை பொருட்கள் திருடிய இரு பெண்கள் கைது

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் மாட்டு கொட்டகையில் பூஜை பொருட்களை திருடிய இரு பெண்களை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி ஏமப்பேர் சேர்ந்த துரைசாமி மகன் சீனுவாசன்,57; மாட்டு வியாபாரி. இவர் அதே பகுதியில் மாட்டு கொட்டகை வைத்துள்ளார். கடந்த 20 ம் தேதி இரவு நள்ளிரவு இரு பெண்கள் மாட்டு கொட்டகையில் புகுந்து அங்கிருந்த வெள்ளி மற்றும் பித்தளை விளக்கு, பித்தளை தட்டு, பித்தளை மணி உள்ளிட்ட 3 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பூஜை பொருட்களை திருடிச் சென்றுள்ளனர். மேலும், பூஜை பொருட்கள் திருடியது தொடர்பாக அங்கிருந்த சிசிடிவி கண்காணிப்பு காமிராக்களிலும் பதிவாகி இருந்தது. இது குறித்து சீனுவாசன் கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து மர்ம ஆசாமிகள் குறித்து விசாரித்தனர். அதில், நீலமங்கலம் நரிக்குறவர் காலனி சேர்ந்த முத்துபாண்டி மனைவி துர்கா,21; ராஜசேகர் மனைவி ரஞ்சிதா,28; என்பது தெரிந்தது. இதனையடுத்து இருவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ