உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மண் கடத்திய 2 லாரி பறிமுதல்

மண் கடத்திய 2 லாரி பறிமுதல்

தியாகதுருகம் : தியாகதுருகம் அருகே கிராவல் மண் கடத்திய 2 டிப்பர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.கள்ளக்குறிச்சி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் ரகுநாத் குமார் நேற்று தியாகதுருகம் - பல்லகச்சேரி சாலையில் வாகன தணிக்கை மேற்கொண்டார்.அனுமதி இன்றி கிராவல் மண் கடத்திச் சென்ற 2 டிப்பர் லாரியை மடக்கினார். லாரிகளை நிறுத்திவிட்டு டிரைவர்கள் தப்பி யோடினர். இரு லாரிகளை யும் பறிமுதல் செய்து தியாகதுருகம் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தார். அவர் அளித்த புகாரின்படி, போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை