மேலும் செய்திகள்
ஆர்.கே.எஸ்., மாஸ்டர்ஸ் பள்ளியில் விஜயதசமி
04-Oct-2025
கள்ளக்குறிச்சி: ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் டாக்டர்.ஆர்.கே.சண்முகம் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் மகுடமுடி தலைமை தாங்கினார். செயலாளர் கோவிந்தராஜூ முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் மோகனசுந்தர் வரவேற்றார். துணை முதல்வர் ஜான்விக்டர், டீன் அசோக், கல்வியியல் கல்லுாரி முதல் வர் ஜெயசீலன் வாழ்த்துரை வழங்கினர். முதல் நிதியமைச்சராகவும், பார்லிமெண்ட் சபாநாயகராகவும் பதவி வகித்த ஆர்.கே. சண்முகம் அவர்களின் தமிழ் மொழி வளர்ச்சிக்கான பங்களிப்பு குறித்து விளக்கி கூறப்பட்டது. நிகழ்ச்சியில் மாணவ, மாணவியர், கல்லுாரி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். பள்ளி முதல்வர் தனலட்சுமி நன்றி கூறினார்.
04-Oct-2025