| ADDED : டிச 07, 2025 05:59 AM
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே அரசு பள்ளி தலைமை ஆசிரியர் அறையை உடைத்து கேமரா, ப்ரொஜெக்டர் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருக்கோவிலுார் அடுத்த ஆவிபுதுார் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி உள்ளது. இப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்தி, 51; கடந்த 4ம் தேதி காலை 8:30 மணிக்கு, வழக்கம் போல் சக ஆசிரியர்களுடன் சென்று பள்ளியை திறக்க முயன்றபோது, தலைமை ஆசிரியரின் அறை பூட்டு வெல்டிங் வைத்து உடைக்கப்பட்டு இருந்தது. அங்கிருந்த கேமரா, ப்ரொஜெக்டர், ஸ்பீக்கர் உள்ளிட்ட 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள எலக்ட்ரானிக் பொருட்கள் திருடப்பட்டது தெரிய வந்தது. இது குறித்து தலைமை ஆசிரியர் ஆனந்தி கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.