மேலும் செய்திகள்
அரசு பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர்களுக்கு பணி ஆணை
4 minutes ago
எஸ்.ஐ.ஆர்., பணி கலெக்டர் ஆய்வு
5 minutes ago
கள்ளக்குறிச்சி: வீரசோழபுரத்தில் கலெக்டர் அலுவலக கட்டுமான பணிகளை கலெக்டர் பிரசாந்த் ஆய்வு செய்தார். கள்ளக்குறிச்சி அடுத்த வீரசோழபுரத்தில் புதிய கலெக்டர் அலுவலக கட்டுமானப் பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகளை கலெக்டர் பிரசாந்த் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின், நிருபர்களிடம் கூறியதாவது: வீரசோழபுரத்தில் பொதுப்பணித்துறை சார்பில் அனைத்து வசதிகளுடன், அனைத்து துறைகளும் ஒரே இடத்தில் செயல்படும் வகையில் 139 கோடியே 41 லட்சம் மதிப்பில் 8 தளங்களை கொண்டு 35.18 ஏக்கர் பரப்பளவில் புதிய கலெக்டர் அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது. கட்டுமானப் பணிகள் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான பணிகள் முடிவுற்ற நிலையில், இறுதிக் கட்ட பணிகள் நடந்து வருகிறது. முழு பணிகளையும் விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். மேலும், பணிகளை தரமாக மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது' என்றார்.
4 minutes ago
5 minutes ago