உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

 மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

திருக்கோவிலூர்: மாநில அளவில் நடந்த கலைத் திருவிழா போட்டியில் மணல் சிற்பம் வரைந்து சிறப்பிடம் பெற்ற திருக்கோவிலுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. ஓசூரில் சமீபத்தில் நடந்த மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டியில், திருக்கோவிலுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியை சேர்ந்த 8ம் வகுப்பு மாணவர் ஸ்ரீராம் மற்றும் 5ம் வகுப்பு மாணவி தனுஸ்ரீ ஆகியோர் பங்கேற்று மணல் சிற்பம் அமைத்தனர். இருவரும் இரண்டாம் இடம் பெற்று வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடந்தது. வட்டார கல்வி அலுவலர் வேணுகோபால் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் குமுதவல்லி வரவேற்றார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் சந்தியாகு சிங்கராயன் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சால்வை அணிவித்து பரிசுகள் வழங்கி பாராட்டினார். வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ஓவியா ஆசிரியர் செல்வம் பாராட்டப்பட்டார். ஆசிரியர்கள் நாகமணி, மாலதி, விமலா, திரிஷா, அந்தோணியம்மாள், மேரிஜாய் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்தனர். பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்