உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  வரும் தேர்தலில் தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும் இந்திய கம்யூ., மாநில செயலாளர் பேட்டி

 வரும் தேர்தலில் தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும் இந்திய கம்யூ., மாநில செயலாளர் பேட்டி

கள்ளக்குறிச்சி: 'வரும் தேர்தலில் தி.மு.க., தலைமையிலான எங்கள் கூட்டணியே வெற்றி பெறும்' என இந்திய கம்யூ., மாநில செயலாளர் வீரபாண்டியன் கூறினார். கள்ளக்குறிச்சியில் நடந்த இ.கம்யூ., மாவட்ட குழு கூட்டத்தில் பங்கேற்ற மாநில செயலாளர் வீரபாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது: வரும் தேர்தலில் தமிழ்நாட்டில் தி.மு.க., தலைமையிலான எங்கள் வலுவான கூட்டணியே வெற்றி பெறும். எங்கள் கட்சியின் நுாற்றாண்டு விழாவிற்கு பின் தேர்தல் பணிகளை துவக்குவோம். தி.மு.க., கூட்டணியில் இந்திய கம்யூ., கூடுதல் சீட் பெறுவதை ஜனநாயக விரோத செயலாக தி.மு.க., தலைவரோ, கூட்டணி கட்சி தலைவர்களோ கருதமாட்டார்கள் என நம்புகிறோம். தமிழ்நாட்டில் ஆளுனர் மாளிகையை மக்கள் மாளிகை என ஆளுனர் அறிவித்துள்ளார். மக்களை மதிப்பதாக இருந்தால் சட்டசபை தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டசபை தீர்மானங்களை கிடப்பில் போட்டு வருகிறார். எனவே ஆளுனரின் மாளிகையை அதிகார மாளிகை என பெயர் மாற்றி கொள்ளலாம். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கரும்பு விவசாயிகளுக்கு ஆலைகள் வைத்துள்ள பல லட்சம் ரூபாய் நிலுவை தொகையை பெற்றுத்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு வீர பாண்டியன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி