உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  மணிமுக்தா அணையில் மீன் வளர்ப்புக்கு குத்தகை விண்ணப்பங்கள் வரவேற்பு

 மணிமுக்தா அணையில் மீன் வளர்ப்புக்கு குத்தகை விண்ணப்பங்கள் வரவேற்பு

கள்ளக்குறிச்சி: சூளாங்குறிச்சி மணிமுக்தா அணையில் 5 ஆண்டுகளுக்கான மீன் வளர்ப்பு குத்தகைக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. கலெக்டர் பிரசாந்த் செய்திகுறிப்பு: கள்ளக்குறிச்சி அடுத்த சூளாங்குறிச்சி மணிமுக்தா அணையில் 5 ஆண்டுகளுக்கான மீன் வளர்ப்பு குத்தகைக்கு ஏலம் விடப்படு கிறது. இதற்கு மூடி முத்திரையிடப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகள் இ-டெண்டர் மூலம் சென்னை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இயக்குனர் அலுவலகம் மூலம் ஏலம் விட ஆணையிடப்பட்டுள்ளது. டெண்டர் விண்ணப்பங்கள் மற்றும் விவரங்கள் www.tnters.gov.inஎன்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விபரங்கள் தேவைப்படின் விழுப்புரம் தாட்கோ வளாகத்தில் உள்ள மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை gmail.comஎன்ற இணையதளம், 04146-259329 என்ற எண்ணில் வேலை நாட்களில் நேரில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை