அரசு பள்ளியில் தற்காப்பு கலை பயிற்சி துவக்கம்
மூங்கில்துறைப்பட்டு : ரங்கப்பனுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தற்காப்பு கலை பயிற்சி துவக்க விழா நடந்தது. மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள ரங்கப்பனுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடந்த தற்காப்பு கலை (கராத்தே) பயிற்சி துவக்க விழாவிற்கு, பள்ளி தலைமை ஆசிரியர் மலர்கொடி தலைமை தாங்கி பயிற்சியை துவக்கி வைத்தார். தற்காப்பு பயிற்சியாளர் ஏ ழுமலை மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார். பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.