உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  நிறுத்தப்பட்ட அரசு பஸ்சை இயக்க கோரி செம்மனங்கூர் அரசு பள்ளி மாணவிகள் மனு

 நிறுத்தப்பட்ட அரசு பஸ்சை இயக்க கோரி செம்மனங்கூர் அரசு பள்ளி மாணவிகள் மனு

கள்ளக்குறிச்சி: செம்மனங்கூர் கிராமத்தைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவிகள், நிறுத்தப்பட்ட அரசு பஸ் சேவையை மீண்டும் இயக்க வலியுறுத்தி கலெக்டர் பிரசாந்த்திடம் மனு அளித்தனர். மனு விபரம்: செம்மனங்கூர் கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகளாகிய நாங்கள் தினமும் காலை 8:00 மணியளவில் தடம் எண்.10 என்ற அரசு பஸ்சில் உளுந்துார்பேட்டையில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு சென்றோம். அதேபோல், கல்லுாரி மாணவர்கள், பொதுமக்களும் இந்த பஸ்சில் பயணம் செய்தனர். கடந்த 2 ஆண்டுகளாக செம்மனங்கூருக்கு காலை நேரத்தில் இயக்கப்பட்ட இந்த பஸ் சேவை திடீரென நிறுத்தப்பட்டது. இதனால், நாங்கள் 6 கி.மீ., துாரத்திற்கு நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. சிலர், அவ்வழியாக செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகளிடம் 'லிப்ட்' கேட்டு செல்கின்றனர். இது தொடர்பாக பல முறை மனு அளித்தும் உரிய நடவடிக்கை இல்லை. இதனால் நாங்கள் மிகுந்த சிரமமடைகின்றோம். எனவே, நிறுத்தப்பட்ட தடம் எண்.10 என்ற அரசு பஸ்சை மீண்டும் இயக்க தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்ற கலெக்டர் பிரசாந்த், பள்ளி நேரத்தில் மாணவிகள் மனு அளிக்க வரக்கூடாது, வகுப்பு பாதிக்கப்படும். மனு அளிக்க ஊர் பொதுமக்கள், ஊராட்சி தலைவர் வர வேண்டும் என அறிவுரை வழங்கி, மனு மீதான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை