மேலும் செய்திகள்
அரசு பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர்களுக்கு பணி ஆணை
4 minutes ago
எஸ்.ஐ.ஆர்., பணி கலெக்டர் ஆய்வு
5 minutes ago
கள்ளக்குறிச்சி கமிட்டியில் ரூ.2.42 லட்சம் வர்த்தகம்
6 minutes ago
கள்ளக்குறிச்சி: சிறப்பு தீவிர திருத்த படிவங்களை ஒப்படைப்பதற்கான கால அவகாசம் வரும் 11ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் பிரசாந்த் விடுத்துள்ள செய்திகுறிப்பு: இந்திய தேர்தல் ஆணையம் வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதியை தகுதி நாளாக கொண்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் குறித்த கால அட்டவணையை திருத்தி அமைத்துள்ளது. ஏற்கனவே திருத்த படிவங்களை வரும் 4ம் தேதிக்குள் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது படிவங்களை ஒப்படைக்க கால அவகாசம் வரும் 11ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வரும் 16ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இதனையடுத்து உரிமை கோருதல் மற்றும் ஆட்சேபனைகள் 16ம் தேதி முதல் 2026ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி வரை தாக்கல் செய்யலாம். அதன்பின் இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 14ம் தேதி வெளியிடப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப் பட்டுள்ளது.
4 minutes ago
5 minutes ago
6 minutes ago