உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  எஸ்.ஐ.ஆர்., பணி கலெக்டர் ஆய்வு

 எஸ்.ஐ.ஆர்., பணி கலெக்டர் ஆய்வு

சங்கராபுரம்: சங்கராபுரத்தில் எஸ்.ஐ.ஆர்., பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார். சங்கராபுரம் வி.ஏ.ஓ., அலுவலகத்தில் நடக்கும் பணிகளை ஆய்வு செய்த கலெக்டர் பிரசாந்த், வாக்காளர்களிடம் பெறப்பட்ட படிவங்களை ஆன்லைனில் பதிவு செய்வது குறித்து விளக்கினார். மேலும், முகாமிற்கு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்ய வரும் மக்களிடம், கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என வலியு றுத்தினார். பின், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறப்பு தீவிர திருத்த பணிகள் 73 சதவீதம் முடிவடைந்துள்ளதாகவும், சங்கராபுரம் வட்டத்தில் 72 சதவீத பணிகள் முடிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். ஆய்வின்போது தாசில்தார் வைரக்கண்ணன், ஆர்.ஐ,, திவ்யா, வி.ஏ.ஓ., தீபகுமார் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை