உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மாமனாருக்கு கத்தி வெட்டு மருமகன் கைது

மாமனாருக்கு கத்தி வெட்டு மருமகன் கைது

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அருகே மனைவியை வீட்டுக்கு அனுப்ப மறுத்த மாமனாரை வெட்டிய மருமகனை போலீசார் கைது செய்தனர். திருக்கோவிலுார் அடுத்த காட்டுப்பையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார், 26; இவரது மனைவி சவுமியா, 22; ஓராண்டிற்கு முன் திருமணம் நடந்தது. சவுமியா ஒன்பது மாத கர்ப்பமாக உள்ளார். வளைகாப்பு செய்து பெற்றோர்கள் கோட்டமருதுார் அழைத்துச் சென்றனர். நேற்று முன்தினம் மதியம் மாமனார் வீட்டிற்குச் சென்ற விஜயகுமார் மனைவியை வீட்டிற்கு அனுப்புமாறு கேட்டார். அப்போது, மாமனார் ஏழுமலையுடன், 56; தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த விஜயகுமார் மாமனாரை கொடுவா கத்தியால் வெட்டினார். இது குறித்த புகாரின் பேரில் அரகண்டநல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விஜயகுமாரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ