மேலும் செய்திகள்
சின்னசேலத்தில் கும்ப கலச பூஜை
03-Oct-2025
சின்னசேலம்: சின்னசேலம் பகுதியில் உள்ள கோவில்களில் தீபாவளி சிறப்பு பூஜைகள் நடந்தன. சின்னசேலம் கடை வீதியில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று அதிகாலை 5 மணிக்கு 21 வகையான அபிஷேகம் நடந்தது. தங்க கவசம் அணிவித்து, மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. பூஜைகளை முரளி சர்மா செய்து வைத்தார். அதேபோல் வரதராஜ பெருமாள் கோவிலில் மூலவருக்கு திருப்பதி வெங்டேச பெருமாள் அலங்காரமும், தென்பொன்பரப்பி சொர்ணபுரிஸ்வரர் கோவிலில் சுவாமிக்கு அண்ணா மலையார் அலங்காரமும், சின்னசேலம் சிவன் கோவில் ராஜ அலங்காரம் செய்து வைத்து மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
03-Oct-2025