உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  திருக்கோவிலுார் -- ஆசனுார் சாலை தரம் குறித்து ஆய்வு

 திருக்கோவிலுார் -- ஆசனுார் சாலை தரம் குறித்து ஆய்வு

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் -- ஆசனுார் நான்கு வழி சாலை பணியின் தரம் குறித்து புகார் எழுந்ததை அடுத்து தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு துறை இயக்குனர் நேரில் ஆய்வு செய்தார். திருக்கோவிலுார் -- ஆசனுார் நான்கு வழி சாலை பணி வேகமாக நடந்து வருகிறது. பணியின் தரம் குறித்து பொதுமக்களின் சந்தேகம் பற்றி தினமலரில் சமீபத்தில் படத்துடன் விரிவான செய்தி வெளியானது. இதனைத் தொடர்ந்து நேற்று தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு துறை இயக்குனர் சரவணன் சாலை பணியை நேரில் ஆய்வு செய்தார். கீழத்தாழனுார் சர்க்கரை ஆலையில் துவங்கி, அம்மன்கொல்லைமேடு, ஜி.அரியூர், செட்டித்தாங்கல் என பணிகள் நடைபெறும் பல்வேறு இடங்களில் சாலையை துளையிட்டு, சாலையின் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. பின்னர் இது பற்றி கள்ளக்குறிச்சி கோட்ட பொறியாளர் நாகராஜ், திருக்கோவிலுார் உதவி கோட்ட பொறியாளர் ஜெயலட்சுமி உள்ளிட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். சாலையின் தரம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பொதுமக்களின் சந்தேகம் குறித்து செய்தி வெளியானதையடுத்து நெடுஞ்சாலைத்துறை மாநில உயர் அதிகாரிகள் ஆய்வு செய்த சம்பவம், நெடுஞ்சாலைத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !