| ADDED : டிச 07, 2025 05:53 AM
அரும்புலியூர்: அரும்புலியூர் ஏரியில் இருந்து அப்பகுதி விவசாய நிலங்கள் மற்றும் கரும்பாக்கம் செல்லும் பாசன கால்வாய் துார்ந்ததால், கால்வாயில் தண்ணீர் செல்ல வசதியின்றி மழை நேரங்களில் சுற்றி உள்ள விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்து வருகிறது. உத்திரமேரூர் ஒன்றியம், அரும்புலியூரில் பொதுப்பணி த் துறை ஏரி, 690 ஏக்கர் பரப்பில் உள்ளது. இந்த ஏரி, மழைக் காலத்தில் முழுமையாக நிரம்பினால், அத்தண்ணீரைக் கொண்டு அரு ம்புலியூர், சீத்தாவரம், காவணிப்பாக்கம், கரும்பாக்கம் பகுதிகளில் உள்ள, 1,060 ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்கள் பாசனம் பெறும். அரும்புலியூர் ஏரியில் இருந்து, சீத்தாவரம் விவசாய நிலங்கள் வழியாக, கரும்பாக்கம் வரையிலான விவசாய நிலங்களுக்கு செல்லும் பாசன கால்வாய் உள்ளது. மழைக் காலங்களில் அரும்புலியூர் நிலங்களில் இருந்து இக்கால்வாய் வழியாக வடிந்து செல்லும் மழைநீர் இறுதியாக சாலவாக்கம் ஏரிக்கு சென்றடைகிறது. இக்கால்வாய் பல ஆண்டுகளாக துார் வாராததால் நீரோடும் பகுதி மேடாக உள்ளது. இதனால், மழை காலங்களில் கால்வாயில் நிரம்பும் தண்ணீர் கரைகளை உடைத்து சுற்றிலும் உள்ள வி வசாய நிலங்களில் புகுந்து விடுகிறது. எனவே, மழைக்காலங்களில் சாலவாக்கம் ஏரிக்கும், சாகுபடி காலங்களில் பாசனத்திற்கும் இக்கால்வாய் வழியாக தண்ணீர் செல்ல ஏதுவாக துார்வாரி சீரமைக்க வேண்டும் என , அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.