| ADDED : டிச 02, 2025 04:52 AM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் தாலுகா அலுவலக வளாகத்தில், இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டடத்தில், 108 ஆம்புலன்ஸ் அலுவலகம் மற்றும் துணை அஞ்சலகம் இயங்குவதால் ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் அச்சத்துடன் வந்து செல்கின்றனர். காஞ்சிபுரம் தாலுகா அலுவலக வளாகத்தில், பழமையான கட்டடத்தில், காஞ்சிபுரம் கச்சேரி துணை அஞ்சலகம் மற்றும் 108 ஆம்புலன்ஸ் அலுவலகம் இயங்கி வருகிறது. முறையான பராமரிப்பு இல்லாததால், இக்கட்டடத்தில் செடிகள் வேரூன்றி உள்ளதால், 108 ஆம்புலன்ஸ் அலுவலகத்தில் உள்ள வாசற்படிக்கும், சுவருக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது. அதில் விஷ ஜந்துகள் தஞ்சமடையும் நிலை உள்ளது. இக்கட்டடத்தின் கூரை மழைக்கு ஒழுகுவதால், இந்த அலுவலகங்களில் உள்ள ஆவணங்கள், கம்ப்யூட்டர்கள் மழையில் நனைந்து வீணாகும் நிலை உள்ளது. இதனால், அஞ்சலகத்திற்கு வரும் வாடிக்கையாளர்களும், 108 ஆம்புலன்ஸ் அலுவலகத்திற்கு வரும் ஊழியர்களும் அச்சத்துடன் செல்கின்றனர். எனவே, காஞ்சிபுரம் தாலுகா அலுவலக வளாகத்தில், பழுதடைந்த கட்டடத்தில் இயங்கும் கச்சேரி துணை அஞ்சலகம் மற்றும் 108 ஆம்புலன்ஸ் அலுவலகத்தை இடமாற்றம் செய்ய வேண்டும் என, வாடிக்கையாளர்களும், ஊழியர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.